217
வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தலால், சோமாலியாவில் தேசிய அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஆபிரிக்காவின் கிழக்கு பகுதியில் வேகமாக பரவும் வெட்டுக்கிளிகளால் பயிர்கள் சேதமடைந்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம், அறுவடை காலமென்பதால் வெட்டுக்கிளிகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. ஆபிரிக்கா நாடுகளில் வெட்டுக்கிளி அச்சுறுத்தலால் அவசர நிலையை பிரகடனப்படுத்திய முதல் நாடாக சோமாலியா பதிவாகியுள்ளது. இதனை தவிர பாகிஸ்தானும் நேற்று முன்தினம் வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தலால், அவசர நிலையை பிரகடனப்படுத்தியது.
Spread the love