இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் மகிந்த ராஜபக்ஸவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பு புதுடில்லியில் இடம்பெற்றுள்ளது. இதேவேளை, இன்று காலை பிரதமர் மகிந்த ராஜபக்ஸ இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்துதல், ராணுவம், பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. இதேவேளை, பிரதமர் மகிந்த ராஜபக்ஸ நேற்று மாலை (7.02.10) இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்துள்ளார்.
இந்தியாவுக்கான 5 நாள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டு நேற்று காலை டெல்லியை சென்றடைந்த பிரதமரை இந்தியான் மனிதவள மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் சஞ்சய்தோத்ரே வரவேற்றமை குறிப்பிடத்தக்கது.