146
சீனாவின் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் இன்று உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. பெப்ரவரி 9 ஆம் திகதி வரை 910 பேர் பலியாகியுள்ளனர். நேற்று மட்டுமே அதிகபட்சமாக 97 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது வரை சுமார் 40,553 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சுமார் 3,324 பேர் குணமடைந்துள்ளனர். வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில் அதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சீன அரசு மேற்கொண்டுள்ளது.
Spread the love