165
முல்லைத்தீவு மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் 20 வருடங்கள் பழமையானவை என சட்டவைத்திய நிபுணரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி சட்ட வைத்திய நிபுணரால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாங்குளம் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் 26 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
Spread the love