153
முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் 22ஆம் திகதி தனது சட்டத்தரணியுடன் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப்புலானாய்வு திணைக்களத்துக்கு விசாரணைக்கு சென்ற நிலையில் அவர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
அதனையடுத்து, இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் இன்று (17) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
போலி உறுதிப்பத்திரத்தைத் தயாரித்து தலைமன்னார் பகுதியில் 2 காணிகளை விற்பனை செய்த மோசடி குற்றச்சாட்டில் ரிப்கான் பதியுதீன் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love