உலக அளவில் சீனா மற்றும் வெளிநாடுகளில் 69 மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பரவி இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. சீனாவின் வுகான் நகரில் தோன்றி நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா வைரசினால் நாளுக்கு நாள் அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
இறுதியாக வெளியான தகவல்படி சீனாவில் 1765 பேர் இந்த வைரசினால் உயிரிழந்துள்ளதுடன் 68 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இதுவரை இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் இந்த வைரஸ் தற்போது சீனாவுக்கு வெளியே இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து , கனடா , ஜப்பான், பிரான்ஸ், அவுஸ்திரேலியா, தென்கொரியா, மலேசியா என பல சர்வதேச நாடுகளை அச்சுறுத்தி வருகின்ற நிலையில் சீனா மற்றும் வெளிநாடுகள் 69 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு இந்த வைரஸ் பரவி இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. #கொரோனா #பாதிப்பு #சீனா #உயிரிழப்பு