2019ம் ஆண்டு நிலவரப்படி இந்தியா உலகின் 5வது பெரிய பொருளாதார நாடாக முன்னேறி இருப்பதாக அமெரிக்காவில் உள்ள உலக மக்கள் தொகை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பொருளாதார மந்தநிலை நிலவி வருகின்ற அதேவேளை பல்வேறு சிறு-குறு தொழில்களில் உற்பத்தியில் குறைவு ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியானது.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதத்தில் கடும் சரிவு ஏற்பட்டு இருப்பதாகவும் கடந்த 3 ஆண்டுகளில் இந்த சரிவு 7.5 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக வீழ்ச்சி அடைந்து இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் அண்மையில் தற்போது இந்திய பொருளாதாரம் மந்த நிலையில் இருந்து மீண்டு வருவதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். மேலும் வரவுசெலவுத்திட்டத்தில் செய்யப்பட்டுள்ள ஒதுக்கீடுகள் பொருளாதாரத்தை மேம்படுத்தும் எனவும் அவர் தெரிவித்திருந்தார். ;.
இந்த நிலையில் இந்தியா பொருளாதார வளர்ச்சியில் தொடர்ந்து முன்னேறி வருவதாகவும் 2019-ம் ஆண்டு நிலவரப்படி இந்தியா உலகின் 5வது பெரிய பொருளாதார நாடாக முன்னேறி இருப்பதாகவும் அமெரிக்காவில் உள்ள உலக மக்கள் தொகை ஆய்வு நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. .
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, பொருளாதார வளர்ச்சி 2.94 டிரில்லியன் அமெரிக்க டொலராக குறைந்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சியில் மேம்பாடு அடைந்துள்ள நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் வளர்ச்சி அபரிதமாக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் சுட்டி காட்டப்பட்டுள்ளது.
மக்களின் வாங்கும் சக்தியை ஆய்வு செய்ததில் ஜப்பான், ஜெர்மனி நாடுகளை விட இந்திய மக்கள் அதிக வாங்கும் சக்தியுடன் இருப்பதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஏற்பட்டுள்ள இந்த பொருளாதார வளர்ச்சி மூலம் அது பரித்தானியா பிரான்ஸ் நாடுகளை பின்னுக்கு தள்ளிவிட்டு 5வது இடத்துக்கு முன்னேறி இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இந்தியாவின் பொருளாதார சுதந்திரம், தனியார் மயமாக்கல், அன்னிய முதலீடு ஆகியவையே இந்தியாவின் பொருளாதார மேம்பாட்டுக்கு மிகப்பெரிய உதவியாக அமைந்துள்ளது எனவும் அந்த அமெரிக்க நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் சேவை துறைகளின் பங்களிப்பு பிரமிக்கதக்க வகையில் அதிகரித்து இருப்பதாகவும் அந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. #பொருளாதார #இந்தியா #முன்னேற்றம்