188
சைக்கிள் பிறிவில் இறுக்கப்பட்ட பொல்லுகளுடன் வன்முறைச் சம்பவம் ஒன்றுக்கு சென்று கொண்டிருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் மூவரும் வன்முறைச் சம்பவம் ஒன்றுக்காக மானிப்பாயிலிருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளை சங்கானை பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர்.
“சந்தேக நபர்களிடமிருந்து 6 பொல்லுகள் கைப்பற்றப்பட்டன. அவற்றில் சைக்கிள் செயின் பிறிவில் இறுக்கப்பட்டிருந்தன. அவை ஆபத்தான ஆயுதங்களாகப் பார்க்கப்படுகின்றன.
அத்துடன், மூவரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது கஞ்சா சரைகளும் கைப்பற்றப்பட்டன. சந்தேக நபர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர்கள் மூவரும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவர்” என காவல்துறையினர் கூறினர். #வன்முறை #கைது #சைக்கிள்
Spread the love