கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த சீன பெண் பூரணமாக குணமடைந்துள்ள நிலையில் இன்று (19) முற்பகல் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளார். இதனையடுத்து இன்று சீனா நோக்கி செல்லவுள்ள குறித்த சீன பெண் சீன தூதரக அதிகாரிகளால் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
சுற்றுலாப்பயணம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை சென்றிருந்த 40 வயதுடைய குறித்த பெண கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு கடந்த ஜனவரி மாதம் 25 ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
சுமார் 20 நாட்கள் இலங்கையில் தங்கியிருந்த அவர் கடந்த 25 ஆம் திகதி சீனா நோக்கி புறப்பட்டுச் செல்லவிருந்த நிலையில் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டார்.
சுமார் 10 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்த குறித்த பெண் அவரின் உடலில் இருந்து முழுவதுமாக வைரஸ் நீங்கி விட்டதா என்பது தொடர்பில் உறுதிப்படுத்துவற்காக மேலும் சில நாட்களுக்கு வைத்தியசாலையில் தங்க வைக்கப்பட்டிந்தநிலையில், நேற்று அவர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சினால் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, இன்று முற்பகல் குறித்த பெண் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியமை குறிப்பிடத்தக்கது. #கொரோனா #தொற்று #சீனப்பெண் #சீனா #பயணம்