196
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தபட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் சாட்சி விசாரணைகளை எதிர்வரும் மாதம் 11ஆம் திகதி ஆரம்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது
குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது மூவரடங்கிய கொழும்பு விசேட மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது. இராணுவ புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர்கள் ஒன்பது பேருக்கு எதிராக சட்டமா அதிபரினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது #பிரகீத்எக்னெலிகொட #காணாமல்ஆக்கப்பட்டமை #விசாரணை #புலனாய்வு
Spread the love