ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட குழந்தைகளுக்கான நல்வாழ்வு அளிக்கும் திறன் படைத்த நாடுகள் பட்டியலில் இலங்கை 68வது இடத்தை பெற்று முன்னேற்றமடைந்துள்ளது. நோர்வே முதலிடத்தையும் தென்கொரியா இரண்டாவது இடத்தையும், நெதர்லாந்து 3வது இடத்தையும் பிடித்துள்ளன. இதில் இந்தியாவுக்கு 131வது இடமே கிடைத்துள்ள அதேவேளை . சீனா 43 வது இடத்தையும், சிங்கப்பூர் 12வது இடத்தையும், பாகிஸ்தான் 140வது இடத்தையும், பங்களாதேஸ் 143வது இடத்தையும் பிடித்துள்ளன.
உலசு சுகாதார நிறுவனம். யுனிசெப், லான்செட் மருத்துவ இதழ் ஆகியவை இணைந்து உலகம்முழுவதும் 180 நாடுகளில் குழந்தைகளுக்கான நல்வாழ்வு குறித்தும் அவர்களுக்கு ஏற்ற சுற்றுச்சூழல் பற்றியும் 40 குழந்தைகள் நல நிபுணர்கள், சுகாதார ஆய்வாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.
இந்த ஆய்வின் முடிவுகளை நிலைத்தன்மை மற்றும் செழிப்பு குறியீடு ஆகிய இரு பிரிவாக வெளியிடப்பட்டிருக்கிறது. செழிப்பு குறியீடு என்பது 5வயதிற்கு உட்டபட்ட குழந்தைகளுக்ளின் இறப்பு விகிதம், பிரசவ கால குழந்தை இறப்பு, தற்கொலை, குழந்தைகளுக்கான மருத்துவ சேவைகள், சுகாதாரம், தூய்மை மற்றும் தீவிர ஏழ்மை இல்லாமை ஆகியவை அடங்கும் . அதேபோல் கல்வி வளர்ச்சி, ஊட்டச்சத்து, சுதந்திரம், வன்முறையில் இருந்து பாதுகாப்பு போன்றவையும் செழிப்பு குறியீடாக கணக்கிடப்பட்டுள்ளது
நொறுக்குத்தீனிகள் வர்த்தக கலாச்சாரம் குழந்தைகளுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சுகாதாரமற்ற நொறுக்குத்தீனிகள் குழந்தைகளை கவரும் வகையில் அதிக அளவில் விளம்பரப்படுத்தப்படுகின்றன. இவற்ற சாப்பிட்டால் குழநதைகளின் உடல்நிலை பாதிக்கப்படுவதுடன், அவர்களின் உடல் எடையும் அதிகரித்து பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனவே இவற்றில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க உலக அளவில் புதிய முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. #குழந்தைகளுக்கான #நல்வாழ்வு #இலங்கை #முன்னேற்றம்