Home இலங்கை தமிழ் தேசியக்கூட்டமைப்பை கட்சியாக பதிவு செய்ய கோரி உண்ணாவிரத போராட்டம் 

தமிழ் தேசியக்கூட்டமைப்பை கட்சியாக பதிவு செய்ய கோரி உண்ணாவிரத போராட்டம் 

by admin
 
தமிழ் தேசியக்கூட்டமைப்பை கட்சியாக பதிவு செய்ய கோரியும்,பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மன்னாரை சேர்ந்த இளைஞர் ஒருவர் இன்று சனிக்கிழமை காலை 11 மணி முதல் உண்ணாவிரத போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளார். மன்னாரைச் சேர்ந்த இரத்தினம் ஞானசேகரம் யூலியஸ்(வயது-39) என்ற நபரே குறித்த உண்ணாவிரத போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளார்.
உண்ணாவிரத போராட்டத்திற்கு முன்னர் இன்றைய தினம் காலை ஊடக சந்திப்பை மேற்கொண்டார்.
அதன் போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,,,
தமிழ் தேசியக்கூட்டமைப்பு தனது அங்கத்துவ கட்சிகளுடன் இணைந்து கட்சியை பதிவு செய்வதாக கூடி முடிவை மேற்கொண்ட போதும் இது வரை கட்சியை பதிவு செய்யவில்லை. எனவே கீழ் குறிப்பிடும் கோரிக்கையை முன் வைத்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளேன்.
தமிழர்களின் அடையாள கூட்டணியான தமிழ் தேசியக்கூட்டமைப்பை ஓர் அரசியல் கட்சியாக பதிவு செய்ய வேண்டும்,அக்கட்சியின் எழுத்து மூல ஆவணத்தை (யாப்பை) உறுவாக்கி மக்களுக்கு பொறுப்பாக இருக்க வேண்டும்.,
சுமார் 20 வருடங்களாக இக்கூட்டமைப்பில் இருந்து சாதிக்க முடியாமல் போன தலைவர்கள் இனியும் ஏதாவதி சாதிப்பார்கள் என்பது சாத்திய மற்றது.எனவே காலம் தாழ்த்தாது உங்களின் பொறுப்புக்களில் இருந்து இராஜினாமா செய்து கட்சியின் ஆலோசகர்களாக விரும்பினால் தொடருங்கள்.
இளைஞர்களைக் கொண்டு கட்சியை பலப்படுத்தி தலைமைகளை செயல்திறன் மற்றும் துடிப்பு உள்ள அடுத்த தலைமுறையினரிடம் கைமாற்றுங்கள்.உள்ளிட்ட நான்கு கோரிக்கைகளை மக்கள் சார்பாக முன் வைக்கின்றேன்.
தமிழரசுக் கட்சி உற்பட தமிழ் தேசியக்கூட்டமையின் ஏனைய பங்காளிக் கட்சிகளுக்கு கூட்டமைப்பை கட்சியாக பதிவதில் எந்த ஆட்சேபனையும் இருக்காது என்பதனையும் ஒரு சிலரிடம் மட்டுமே ஆட்சேபனை உள்ளது என்பதுமே இது வரை உள்ள பொதுவான கருத்து.
எனவே மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளை முன் வைத்து மேற்கொள்ளப்படும் உண்ணாவிரத போராட்டத்திற்கு தாயகத்தை சேர்ந்த இளைஞர்கள்,யுவதிகள், பல்கலைக்கழக மாணவர்கள்,வர்த்தக சங்கங்கள்,பொது அமைப்புக்கள் பொது மக்கள் அனைவரிடமும் ஆதரவை எதிர் பார்த்துள்ளேன்.
எனவே மேற்குறித்த கோரிக்கைகளை முன் வைத்து இன்று சனிக்கிழமை(22) காலை முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கின்றேன் என தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து மன்னார் நகர பகுதியில் அமைந்துள்ள தந்தை செல்வாவின் சிலைக்கு மலர் மாலை அணிவித்தார். அதனைத்தொடர்ந்து மன்னார் நகர சபைக்கு முன்பாக தனது உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  #தமிழ்தேசியக்கூட்டமைப்பு  #பதிவு  #உண்ணாவிரதபோராட்டம்  #இளைஞர் #தமிழரசுக்கட்சி
 
Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More