ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 30/1 பிரேரணையிலிருந்து மாத்திரமே இலங்கை விலகத் தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, மனித உரிமைகள் பேரவைகள் பேரவையிலிருந்து முழுமையாக விலகத் தீர்மானிக்கவில்லை எனத்; தெரிவித்துள்ளார்
மேலும் மனித உரிமைகள் பேரவைக்குள் ஒரு நாடு என்ற வகையில் இலங்கை தொடர்ச்சியாக நீடிக்கும் எனவும் இலங்கைக்கு அவசியமான விவகாரங்களின் போது அந்த அமைப்புடன் இணைந்து செயற்படுவதாக அரசாங்கம் தீர்மானித்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். #மனிதஉரிமைகள்பேரவை #விலக #ஸ்ரீலங்காசுதந்திரக்கட்சி