169
முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அடுத்த வாரம் புலனாய்வுத்துறையினர்; அழைத்து விசாரணைகளை மேற்கொள்வார்கள் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனைத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் இணைந்து தன்னைக் கொலை செய்வதற்கு மேற்கொண்ட சூழ்ச்சி விவகாரம் தொடர்பில் தன்னால் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய இவ்வாறு விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். #ரணில்விக்கிரமசிங்க #புலனாய்வுத்துறையினர் ,#விசாரணை
Spread the love