142
நாடளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட 4 பேருக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணத் தடை ஜூலை மாதம் 23 ஆம் திகதி வரை தளர்த்தப்படுவதாக கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.
சட்டவிரோதமாக உழைக்கப்பட்ட 15 மில்லியன் ரூபா நிதி N.R Consultancy நிறுவனத்தில் முதலீடு செய்ததன் ஊடாக நிதி மோசடி சட்டத்தின் கீழ் நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட நான்கு பேருக்கு எதிராக காவல்துறை நிதிக் குற்ற விசாரணை பிரிவினால் தாக்கல் செய்த முறைப்பாடு இன்று (27) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. #நாமல்ராஜபக்ஸ #பயணத்தடை
Spread the love