193
மன்னார் நகர சபை மற்றும் சனிவிலேஜ் கடற்படையினர் இணைந்து இன்று சனிக்கிழமை(29) காலை 9.30 மணியளவில் மன்னாரில் பாரிய சிரமதான பணி ஒன்றை முன்னெடுத்தனர். மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பிரதான வீதியில் இருந்து தாழ்வுபாடு வரையான பிரதான பாதையில் சிரமதான பணியில் ஈடுபட்டனர்.
குறித்த பிரதான வீதியின் இரு பகுதிகளிலும் காணப்பட்ட பற்றைகள் வெட்டப்பட்டு துப்பரவு செய்யப்பட்டது. மேலும் உக்காத பிளாஸ்ரிக் பொருட்களையும் கடற்படையினர் சேகரித்தனர். குறித்த சிரமதான நிகழ்வில் மன்னார் நகர சபையின் முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன், சனிவிலேஜ் கடற்படை முகாமின் கட்டளை அதிகாரி ரி.பி.தீகலா கலந்து கொண்டனர்.
இதன் போது மன்னார் நகர சபையின் சுற்றிகரிப்பு பணியாளர்கள்,கடற்படை வீரர்கள் இணைந்து சிரமதான பணியை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது. ம #மன்னார் #நகரசபை #கடற்படை #சிரமதானம்
Spread the love