185
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட காவற்துறை அத்தியட்சகர் ஷானி அபேசேகர உள்ளிட்ட அந்த திணைக்களத்தின் மேலும் இரண்டு பேரை அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. மார்ச் மாதம் மூன்றாம் திகதி அவர்களை இவ்வாறு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
சிரேஸ்ட காவற்துறை அத்தியட்சகர் ஷானி அபேசேகர உதவி காவற்துறை அத்தியட்சகர் பி.எஸ்.திசேரா மற்றும் பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா ஆகியோருக்கே இவ்வாறு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது
Spread the love