240
முல்லைத்தீவு மாவட்ட புதிய அரசாங்க அதிபர் இன்று தமது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். பிரதேச செயலாளராகவும் மேலதிக அரசாங்க அதிபராகவும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளராகவும் பணியாற்றிய கே.விமலநாதன் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வறுமையில் இருக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் பல முக்கிய விடயங்களைத் தான் அவதானித்திருப்பதாகவும் அரசியல் பிரமுகர்களின் ஆதரவைப் பெற்று செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் புதிய அரசாங்க அதிபர் கே.விமலநாதன் குறிப்பிட்டார்.
Spread the love