169
அமெரிக்காவின் டென்னிசி மாநிலத்தில் நேற்று வீசிய கடும் சூறாவளியில் சிக்கி 25 பேர் உயிரிழந்துள்ளனர். அதிவேகத்தில் வீசிய இந்த சூறாவளியால் அதிகமான கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்கம்பங்கள் மற்றும் மரங்கள் சாய்ந்ததுடன் ; பல்வேறு பகுதிகளில் மின்சாரம் தடைபட்டிருந்தது.
சூறாவளியில் சிக்கியும், கட்டிட இடிபாடுகளில் சிக்கியும் 25 பேர் உயிரிழந்துள்ள நிலையில் சுமார் 150 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. #அமெரிக்கா #சூறாவளி #உயிரிழப்பு
Spread the love