யாழ்ப்பாணம் நகர வலையத்தில் தெரிவு செய்யப்பட்ட நகர சேவைகள் மற்றும் பொது நவநாகரீக இடங்களை மேம்படுத்துவதற்காக மூலோபாய நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 55 மில்லியன் அமெரிக்க டொலர் மேலதிக கடனை சர்வதேச அபிவிருத்தி நிறுவனத்தினால் வழங்கப்பட்டுள்ளது.
இந்த கடன் தொகையில் ஒரு பகுதியை யாழ்ப்பாணத்தில் பிள்ளையார் கோயில் குளம் மற்றும் தேவர் குளம் ஆகிய இடங்களின் 2 நீர்த்தேக்கங்களின் கரையோரங்களை பாதுகாத்தல் மற்றும் வண்டல் மண்ணை அகற்றுவதற்கான உத்தேச திட்டத்திற்கு செலுத்துவதற்காக எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இதற்கு அமைவாக, குறித்த திட்டத்தின் கீழ் இந்த ஒப்பந்தத்திற்கு 113.4 மில்லியன் ரூபாவை (வற் வரியுடன்) இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திடம் வழங்குவதற்காக நகர அபிவிருத்தி நீர் வழங்கல் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சர் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.