156
திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன்(97) உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானார்.
உடல்நிலை பாதிப்பு காரணமாக கடந்த 24 ஆம் திகதி சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டிருந்த அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வந்த நிலையில் இன்று அதிகாலை காலமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவரது உடல் கீழ்பாக்கத்தில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. #திமுக #அன்பழகன் #அப்பலோ
Spread the love