வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று (08.03.20) முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்
சர்வதேச மகளிர் தினமான இன்று சர்வதேச மகளிர் தினத்தை துக்க தினமாக அனுஷ்டித்து சர்வதேச விசாரணையை கோரி இந்த கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவில் 2017-03-08 ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் மூன்று வருடங்களை கடந்து நாலாவது வருடத்தை நோக்கிச் செல்லும் இன்றைய நாளில் குறித்த போராட்டம் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது
குறித்த போராட்டத்துக்கு அனைத்து தரப்பினரையும் ஆதரவு வழங்குமாறும் முல்லைத்தீவில் பூரண கடையடைப்பினை மேற்கொள்ளுமாறும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கோரியிருந்தனர்
இந்நிலையில் இன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு வர்த்தக சங்கம், புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கம்,உடையார்கட்டு வர்த்தக சங்கம்,விசுவமடு வர்த்தக சங்கம் முள்ளியவளை வர்த்தக சங்கம், ஒட்டுசுட்டான் வர்த்தக சங்கம், மாங்குளம் வர்த்தக சங்கம்,மல்லாவி வர்த்தக சங்கம் உள்ளிட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் வர்த்தக சங்கங்களுக்கு உட்ப்பட்ட வர்த்தக நிலையங்கள் அனைத்தும் பூட்டப்பட்டு பூரண கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.