சீனாவில் ஹூபெய் மாகாணம் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் 31 மாகாணங்களுக்கு வேகமாக பரவியது. இந்த வைரசால் தினமும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
கொரோனாவை கட்டுப்படுத்த முடியாததால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் கூடிக்கொண்டே சென்றது. சில நாட்களுக்கு முன்பு பலி எண்ணிக்கை 2 ஆயிரத்து 500-ஐ தாண்டியது. நேற்று 28 பேர் கொரோனா வைரசுக்கு இறந்தனர்.
இதனால் சீனாவில் கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 70 ஆக உயர்ந்தது. நேற்று புதிதாக 99 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.
இந்நிலையில், சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் மேலும் 27 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து பலியானோர் எண்ணிக்கை 3,097 ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 80,651 லிருந்து 80,696 ஆக உயர்ந்துள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் பரவுவது ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஆனாலும், வைரஸ் பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது.