361
அச்செழு சைவப்பிரகாச வித்தியாசாலைக்குள் புகுந்த கும்பல் ஒன்று அங்கு கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரைத் தாக்கியுள்ளது. பழைய மாணவர்கள் ஐவர் அடங்கிய கும்பல் ஒன்றே இந்தச் செயலைச் செய்துள்ளது.என காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்றது.
பழைய மாணவர்கள் சிலருக்கும் பாடசாலை நிர்வாகத்துக்கும் உள்ள தனிப்பட்ட முரண்பாடு காரணமாகவே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது என காவல்துறையினர் தெரிவித்தனர்.
அது குறித்து மேலும் தெரியவருவதாவது,
“இன்று காலை பாடசாலை வளாகத்துக்குள் புகுந்த பழைய மாணவர்கள் 5 பேர், ஆசிரியரின் கையிலிருந்த பாடப்புத்தகங்களைப் பறித்து வீசி எறிந்துள்ளனர். அத்துடன், ஆசிரியரின் கழுத்தை நெரித்து தள்ளிவிட்ட பழைய மாணவர் ஒருவர், அவரை பாடசாலையிலிருந்து வெளியேறுமாறு மிரட்டி தாக்கியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பாடசாலை அதிபரால் பழைய மாணவர்களுக்கு எதிராக அச்சுவேலி காவல் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்ட போதும் பின்னர் சமாதானமாகச் செல்வதாக முறைப்பாடு மீளப்பெறப்பட்டுள்ளது” என்று காவல்துறை தரப்பு தெரிவிக்கின்றன. #ஆசிரியர் #தாக்குதல் #அச்செழு #பாடசாலை
Spread the love