179
மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் 150 ஆண்டு பூர்த்தி யூபிலி நிகழ்வின் ஓர் அங்கமான கல்வி கண்காட்சி இன்று புதன் கிழமை (11) காலை பாடசாலையின் அதிபர் அருட்சகோதரர் ரொஜினோல்ட் தலைமையில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு 150 வருட பூர்தியை முன்னிட்டு பாடசாலை சமூகம் மற்றும் பாடசாலை பழைய மாணவர்கள் சார்பாக பல்வேறுபட்ட கலாச்சார மற்றும் சமூக நலன் சார்ந்த பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்று வருகின்றன.
அந்த வகையில் 150 ஆண்டு சாதனை பயணத்தின் ஓர் அங்கமான கல்வி கண்காட்சி இன்றைய தினம் புதன் கிழமை காலை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த கண்காட்சி நாளை(11) வியாழக்கிழமை மாலை 4 மணி வரை இடம் பெறவுள்ளது.
ஆரம்ப நிகழ்வில் விருந்தினர்களாக ஓய்வு பெற்ற சிரேஸ்ட இலங்கை வங்கி முகாமையாளர் மைக்கல் ஜோசப் மரியநாயகம், மன்னார் வாழ்வுதைய இயக் குனர் அருட்தந்தை எஸ்.அன்ரன் அடிகளார், மன்னார் வலய கல்விபணிப்பாளர் பிறட்லி, மன்னார் டிலாசால் சபை இயக்குனர் அருட்சகோதரர் ஸ்ரனிஸ்லாஸ் உற்பட பலர் கலந்துகொண்டனர். இதன் போது கல்வி கண்காட்சி வைபவ ரீதியாக ஆரம்பித்துவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. #மன்னார் #புனிதசவேரியார் #யூபிலி #கண்காட்சி
Spread the love