பிரித்தானியாவின் சுகாதார அமைச்சர் நடீன் டொரீஸ் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட முதலாவது நாடாளுமன்ற உறுப்பினராக இனம் காணப்பட்ட அவர் தான் தனிமைப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
இந்தநிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சுகாதார அமைச்சர் நடீன் டொரீஸை சந்தித்த நபர்களை அழைத்து அவர்களையும் பரிசோதிக்க உள்ளதாக பிரித்தானிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பிரித்தானியாவின் இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, வேல்ஸ் மற்றும் வட அயர்லாந்து ஆகிய பகுதிகளில் 6 பேர் கொரோனாவால் பலியாகி உள்ள நிலையில் மேலும், 382 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
இங்கிலாந்தில் 324 பேரும், ஸ்கொட்லாந்தில் 27 பேரும், வட அயர்லாந்தில் 16 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது #பிரித்தானிய #சுகாதாரஅமைச்சர் #கொரோனா #நடீன்டொரீஸ்