உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில் அதற்கு பதிலளிக்கும் வகையில் அயர்லாந்து அனைத்து பாடசாலைகள் , பல்கலைக்கழகங்கள் மற்றும் பொது அலுவலகங்களை மூடுவதாக அறிவித்துள்ளது .
இன்று வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு அமுலுக்கு வரும் இந்த நடவடிக்கை குறைந்தபட்சம் மார்ச் 29 வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
நேற்றையதினம் அயர்லாந்தில் வைரஸ் பாதிப்பினால் முதலாவதாக ஒரு பெண் உயிரிழந்துள்ளார். அந்த பெண் வெளிநாட்டில் எந்த வைரஸ் பாதிப்புக்குள்ளான பகுதிக்கும் பயணம் செய்யவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது
நேற்றிரவு அங்கு புதிதாக ஒன்பது பேருக்கு தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதனையடுத்து அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43 ஆக உயர்வடைந்துள்ளதனையடுத்து இந்த முடிவு எடுபக்கப்பட்டுள்ளது. #அயர்லாந்து #பாடசாலைகள் #பல்கலைக்கழகங்கள் #அலுவலகங்கள் #கொரோனா