182
கொரோனோ வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர் என்ற சந்தேகத்தின் பேரில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள், பரிசோதனைகளின் பின்னர், இன்று (16) விடுவிக்கப்பட்டுள்ளனரெனத் தெரிவிக்கப்படுகிறது.
அவர்களுக்கு தொற்று இல்லை என்பது பரிசோதனைகளின் மூலம் கண்டறியப்பட்டதையடுத்தே, விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மன்னார் இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ சிப்பாய் ஒருவர் மற்றும் வவுனியாவை சேர்ந்த நபர் ஒருவர் கொரோனோ தொற்றுக்கு உள்ளாகி இருப்பார்கள் எனும் சந்தேகத்தில் யாழ்,போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அவர்கள் இருவருமே விடுவிக்கப்பட்டுள்ளனர். #கொரோனோ #பாதிப்பு #யாழ்போதனாவைத்தியசாலை #விடுவிப்பு #இராணுவமுகாம்
Spread the love