252
யாழ். தேர்தல் மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் பங்காளி கட்சிகளான புளொட் மற்றும் ரெலோ ஆகியன வேட்பாளர்கள் நியமனம் முடிவுக்கு வந்த நிலையில் தமிழரசு கட்சியின் வேட்பாளர்கள் நியமனம் உத்தியோகபூர்வமாக இதுவரை அறிவிக்கப்படவில்லை.
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில், யாழ் தேர்தல் மாவட்டத்தில் (கிளிநொச்சி மாவட்டம் உள்ளடங்கலாக) தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் புளொட் கட்சி சார்பில் அதன் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான த. சித்தார்த்தனும் , வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பா. கஜதீபனும் போட்டியிடவுள்ளனர். மற்றுமொரு பங்காளி கட்சியான ரெலோ சார்பில் சுரேன் என அழைக்கப்படும் சுரேந்திரன் குருசாமி போட்டியிடவுள்ளார்.
தமிழரசு கட்சி சார்பில் அதன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா , எம்.ஏ. சுமந்திரன் , ஈ.சரவணபவன் மற்றும் சி. ஸ்ரீதரன் ஆகியோர் போட்டியிடவுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஏனைய மூன்று வேட்பாளர்களும் தமிழரசு கட்சி சார்பில் புதிதாக களமிறங்கவுள்ளனர். படுகொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ந.ரவிராஜின் மனைவியான ர. சசிகலா , இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் மற்றும் வே.தபேந்திரன் ஆகியோர் போட்டியிடவுள்ளதாக கட்சி தகவல்கள் மூலம் அறிய முடிகிறது. #தமிழரசுகட்சி #வேட்பாளர்கள்நியமனம் #அறிவிக்கப்படவில்லை #புளொட் #ரெலோ
Spread the love