169
COVID19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்மொழிகிறது
அதி மேன்மைதகு கோட்டபாய ராஜபக்ஷ,
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி
ஜனாதிபதி செயலகம், கொழும்பு 01.
16.03.2020
COVID19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்மொழிகிறது.
COVID 19 (கொரோனா வைரஸ்) இன் நிலையை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிர்வாகக் குழு பரிசீலித்துள்ளது.
இலங்கையில் தொற்றுநோய், உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பின்வரும் நடவடிக்கைகளை எடுக்க உங்களை கேட்டுக்கொள்கிறோம்.
1. நுழைவதற்கான அனைத்து துறைமுகங்களையும் நிறுத்தவும். (விமான துறைமுகங்கள் மற்றும் கப்பற் துறைமுகங்கள்)
2. பொது விடுமுறைகளை முழு வாரத்திற்கும் நீடிக்கவும், தேவையற்ற மக்கள் நகர்வுகளை தடுக்கவும்,தேவையற்ற முறையில்
மக்கள் ஒன்று கூடுதலையும் தடுக்கவும்.
3.சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் அவர்களது அலுவலகங்கள், கிராம அலுவலர், ஆயுதப்படைகள் மற்றும் காவல்துறை பயன்படுத்தி கொரோனா தொற்றுக்குட்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்களை மத்தியில் ஒருங்கிணைக்கப்பட்ட கண்காணிப்பு செயல்திட்ட மூலம் கண்டறிதல்.
4. அரசு மற்றும் தனியார் துறைகளில் உள்ள சுகாதார ஊழியர்களுக்கு போதுமான பாதுகாப்பு (PPE-Personal protective equipments) உபகரணங்களை வழங்குதல்.
5. அரசு மருத்துவமனைகளில் உள்ள அனைத்து அவசரமற்ற சுகாதார சேவைகளையும் ஒத்திவைக்குதல்.
மேற்கண்ட பரிந்துரைகள் சீனா மற்றும் சிங்கப்பூரில் உள்ள அனுபவங்களைப் படித்ததன் மூலம் கவனமாக முன்வைக்கப்பட்டுள்ளன.
COVID19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் மேற்குறிப்பிட்ட நாடுகள் வெற்றி பெற்றுள்ளன. இதற்கு மாறாக, மேற்கூறியவற்றைக் கடைப்பிடிக்கத் தவறிய இத்தாலி திட்டமிட்டு
முன் நடவடிக்கைகளினை செய்யாதன் காரணமாக இத் தொற்றுநோயை கட்டுப்படுத்தத் தவறி
அதன் குடிமக்களுக்கும் உலகத்திற்கும் பேரழிவு தரக்கூடிய விளைவுகளுக்கு காரணமாகியுள்ளதுடன் உலகின் பிற பகுதிகளுக்கு தொடர்ந்து அச்சுறுத்தலாக இருக்கின்றது.
இந்த நோய் பரவுவதைத் தடுக்க எண்பது சதவிகிதம் (80%) தொடர்பு தடமறிதல்(contact tracing) மூலமே முடியும் என ஆய்வுகள் காட்டுகின்றன.
தற்போதைய தொற்றுநோய்
மேலும் பரவாமல் கட்டுப்படுத்துவதைத் தவிர ஏற்கனவே நமது நாட்டிற்குள் இருக்கும் ICU சேவைகள், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க அவசியமான வென்டிலேட்டர் (செயற்கை சுவாச உபகரணங்கள்) ஏற்கனவே அதிகபட்சமாக உபயோகத்தில் இருப்பதாலும் இந் நோய் பரவுதலைக் கட்டுப்படுத்தல் அவசியமாகும்..
மனித வாழ்க்கையை மிகவும் மதிக்கும் ஒரு பொறுப்பான தொழில் சங்கம் என்கின்ற முறையில் மேற்கண்ட திட்டங்களுக்கு நேர்மறையாகவும் உடனடியாகவும் பதிலளிக்குமாறு நாங்கள் உங்களிடத்தில் பதிலை எதிர்பார்க்கிறோம்.
தலைவர்/செயலாளர்
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்.
#கொரோனா #அரசவைத்தியஅதிகாரிகள்சங்கம் #துறைமுகங்கள் #பொதுவிடுமுறை
Spread the love