கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 32 ஐரோப்பிய நாடுகள் மற்றும் துருக்கி நாட்டவர்கள் இந்தியாவுக்குள் நுழைய மார்ச் 18ம் திகதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. உலகை தாக்கிய கொரோனா வைரஸினால் இந்தியாவிலும் 2 பேர் உயிரிழந்துள்ளதுடன் 100க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் நாடு முழுவதும் கல்வி நிறுவனங்களுக்கு மார்ச் 31 வரை மத்திய அரசு விடுமுறை அறிவித்துள்ளதுடன் பொதுமக்களின் ஒன்று கூடும் நிகழ்வுகளுக்கும் தடை விதித்திருக்கிறது.
இந்தநிலையில் 32 ஐரோப்பிய நாடுகள் மற்றும் துருக்கி நாட்டவர்கள் இந்தியாவுக்கு வர மார்ச் 18ம் திகதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கட்டார், ஓமான் மற்றும் குவைத் நாடுகளில் இருந்து வரும் பயணிகள் 14 நாட்கள் பரிசோதனைக்குட்படுத்தப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சீனா, இத்தாலி, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு செல்லும் பயணிகள் கடுமையான மருத்துவ கண்காணிப்புக்குட்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. #ஐரோப்பியநாடுகள் #துருக்கி #சுற்றுலாபயணிகள் #இந்தியா # தடை #கொரோனா