முன்னாள் பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா ஐக்கிய தேசிய கட்சியின் பொருளாளர் பதவியிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். ஐ.தே.க தலைமையகமான சிறிகொத்தவில் இன்று கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை நேரில் சந்தித்து தனது தீர்மானத்தை அறிவித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
தன்னை பதவி விலக வேண்டாமென ரணில் கோரிக்கை விடுத்தாகவும் அவருடன் தனக்கு தனிப்பட்ட முரணப்பாடுகள் எவையும் கிடையாதெனவும் ஹர்ஷ டி சில்வா தெரிவித்ததுள்ளார். தான் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட உள்ளதாலேயே மேற்படி தீர்மானத்தை எடுத்ததாகவும் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார் #ஹர்ஷடிசில்வா #பதவி #ஐக்கியமக்கள்சக்தி # சஜித்பிரேமதாஸ