180
பாறுக் ஷிஹான்
திகாமடுல்ல மாவட்டத்தில் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் அகில இலங்கை தமிழர் மகா சபை புதன்கிழமை (18) பகல் வேட்பு மனுத்தாக்கல் செய்தது. அகில இலங்கை தமிழர் மகா சபையின் எஸ்.கோபாலகிருஸ்ணன், விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோர் திகாமடுல்ல மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலரும் அரசாங்க அதிபருமான டி.எம்.எல்.பண்டாரநாயக்க விடம் வேட்பு மனுக்களை இன்று பகல் கையளித்தனர்.
இவரது கட்சியில் விநாயகமூர்த்தி முரளிதரன், குலசேகரம் கணேசமூர்த்தி, கணபதிப்பிள்ளை உதயரமணன், கணபதிப்பிள்ளை விஜயலட்சுமி, இராஜநாயகம் இராஜேஸ்வரன், இராஜசிங்கம் சுவர்ணராஜ், சின்னத்தம்பி ராசமாணிக்கம், ளதருமலிங்கம் கவிதன், தியாகராசா ஞானேந்திரம், வயந்தராசப்பிள்ளை சந்திரசேகரன் ஆகியோர் திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிடுகின்றனர். #அம்பாறை #விநாயகமூர்த்திமுரளிதரன்
Spread the love