Home இலங்கை மக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தி நோய்த் தொற்றிலிருந்து பாதுகாப்பது பெரும் சவாலாகவே உள்ளது

மக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தி நோய்த் தொற்றிலிருந்து பாதுகாப்பது பெரும் சவாலாகவே உள்ளது

by admin

யாழ்.தர்மினி பத்மநாதன்

           சுய பாதுகாப்பு   என்பது நல்லதொரு முதற் பாதுகாப்பு நடவடிக்கையும் ஆகும்  .மக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தி நோய்த் தொற்றில் இருந்து  பாதுகாப்பது என்பது பெரும் சவாலாகவே உள்ளது என யாழ்.மாவட்ட  அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார் .

யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில்  செயலக கேட்போர் கூடத்தில் (17.03.2020) மாலை 4.30 மணிக்கு இடம்பெற்ற போதே மேற்கண்ட தகவலைத் தெரிவித்தார்  இந்நிகழ்வில் உரையாற்றிய அரசாங்க அதிபர் கருத்து தெரிவிக்கையில்,

நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில்  கொரோனா தொற்றை தடுப்பதற்கான செயற்திட்டத்தை வடிவமைப்பதற்காகவும் செயற்படவும்   இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தினை  கூடியுள்ளோம் . இனிக் கூட்டங்களும் கூட முடியாது . கொரோனா வைரஸ்  தாக்கம் எமது நாட்டிலும் அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையில்  எமது  செயற்திட்டத்தில் சம பங்காளர்களும் பங்கு கொண்டு  தமது பங்களிப்பை  வழங்க  முன் வந்துள்ளனர்.

எம்மைப் பொறுத்த வரையில் எமது  மாவட்டத்தில்  பல பாது காப்பு நடவடிக்கையினை மேற்கொண்டாலும் கூட எங்கள் மக்களின்  ஒத்துழைப்பில் தான் முழுமையான கட்டுப் பாடும் தங்கி உள்ளது . ஆகவே  புலம்பெயர்ந்து  நம்மிடையே வந்துள்ளவர்கள். அல்லது வெளி நாடுகளுக்கு சென்று திரும்பிய நம்மவர்கள்  தங்களை குறிப்பிட்ட 2 வாரங்களுக்கு  தனிமைப் படுத்தி நோய்த் தாக்கம் இல்லை என்பதை கட்டாயம் உறுதி படுத்துவது பொறுப்பு மிக்கது.

இந்நோய் தோற்று பலவகையில் இருக்கலாம் . ஆகவே சுய தனிமைப் படுத்தல் அவசியம் சுய பாதுகாப்பு  நல்லதொரு முதற்பாதுகாப்பு நடவடிக்கையும் கூட . சந்தேகம் இருப்பின்   வட பிராந்திய  சுகாதார பணிமனைக்கு  அறிவித்தல்  கொடுத்து  அவர்களை நாளாந்தம் கண்காணிக்கும் நடவடிக்கையினை பொது சுகாதார பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அவர்களிடம்  எந்த அறிகுறியும் இல்லாத இடத்து அவர்களுக்கு 14 நாட்களின் பின் சான்றிதழ் ஒன்று வழங்கப்படும் .அந்த சான்றிதழை அவர்கள் எங்கும் எடுத்துச் சென்று தம்மை அடையாள படுத்துவதன் ஊடாக பதட்டமின்றி பயணிக்க முடியும் .  எனவே 2 தொட க்கம் 3 கிழமைக்கு மக்களின் தேவையற்ற சன  நடமாட்டத்தை , நெருக்கடியை  குறைத்து வீடுகளில் தங்கி இருக்கும் படி வினயமாகக் கேட்டுக் கொள்கின்றோம் . இதனூடாக நோய்த்தாக்கத்தை குறைக்க ஒத்துழைக்கும் படி கேட்கின்றோம் .

மேலும் , உள்ளூர் வெளியூர் பயணிகள் , அவர்கள் தங்கி இருக்கும் விடுதிகள் , தனிப்பட்ட வீடுகளில் இருப்பின் அந்த இடங்களிலேயே தனிமை படுத்தும் வகையில் ஒழுங்கு செய்ய வேண்டும் அதனை எமது வடபிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை முன்னெடுக்கும் ஆகவே அவர்கள் வெளியில் சென்றால்  அல்லது தலைமறைவானால்  உரிமையாளர்கள் பதில் கூற வேண்டும் எனவே சுய தனிமைப் படுத்தலில் ஒத்துழைக்காதவர்களுக்கு சட்டப படி நடவடிக்கை எடுக்க முடியும் .ஆனால் எமது மக்கள் அதனை உணர்ந்து ஒத்துழைப்பதன் ஊடாக வைரஸ் தாக்கத்தை எதிர் கொள்ளலாம்.

அத்துடன் , புலம் பெயர்ந்தோரும்  வெளி நாட்டு சுற்றுலா பயணிகளும்  நெடுந்தீவு  நயினாதீவுக்கு  அடிக்கடி சென்று வருவது வழக்கம் .கடந்த நாட்களில்  அதிகமானோர் சென்று வருவதனை அவதானிக்க முடிகின்றது. ஆகவே . தத்ற்காலிகமாக அவர்களை அங்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளோம்  . யாத்திரை மற்றும் உல்லாச பயணங்கள் செல்வோர்  எதிர்வரும் இரண்டு கிழமைக்கு பயணங்களை ஒத்திவைக்கும்படி கேட்டுக் கொள்கின்றோம் . அத்துடன் எமது மாவட்டத்தில்  582 பேர்  பல்வேறு வெளிநாடுகளில் இருந்து வருகை தந்துள்ளனர். அவர்களின் விபரங்களை எமது பிரதேச செயலகங்களில் பெற்று பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு வழங்கி சுய தனிமைப் படுத்தலுக்கும் உதவி செய்வார்கள் எனவே வெளிநாடுகளில் இருந்து வருகை தந்தவர்கள் இருப்பின் தங்களுடைய பெயர்களை பதிந்து  எப்போது வந்தார்கள் என்பதனை  குறிப்பிட்டு தங்களதும் தங்கள் சார்ந்தோரினதும்  சமூகத்தினதும்  பாதுகாப்பு தொடர்பில்   ஒத்துழைக்கும் படி கேட்டுக் கொள்கின்றோம் குறிப்பாக  மார்ச் மாதம் வருகை தந்தவர்கள் பதிவு செய்வது அவசியம். சுகாதார பணியாளர்களுடன் போலீசாரும் பணிபுரிவதுடன் முப்படையினரம்   ஒத்துழைப்பு வழங்க உள்ளனர்.

வணிக சங்கத்தினர்  தட்டுப் பாடு இன்றி  போதியளவு உணவுப் பொருட்களை கையிருப்பில் களஞ்சிய படுத்தி  வைத்துள்ளனர். அத்துடன்  எரி  பொருள் தட்டுப் பாடும் இடம்பெறாது .அவசர  கால சேமிப்பு நடவடிக்கைகள்  ஒழுங்கு படுத்தப் பட்டுள்ளன. மக்கள் எந்த வகையிலும் பதட்டம் அடைய தேவை இல்லை.

ஆலய நிகழ்வுகள், திருமண நிகழ்வுகள்,ஏனைய நிகழ்வுகள் மற்றும் கூட்டங்களை இரு வாரங்களுக்கு ஒத்தி வைப்பதுடன்  காரணமின்றி வெளியில் செல்வதை  மக்கள்  கடடாயம் தவிர்க்கவேண்டும் .  சமூகப் பொறுப்புடன் தொற்றை தடுப்பதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்  யாழ் மாவட்டத்தில் கொரோனா  வைரஸ்  விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு  பணியில் முப்படையினரும் ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளனர்.   என்றார்.

  மேலும் வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்   ஆ. கேதீஸ்வரன்  குறிப்பிடுகையில்

கடல் கடந்த பிரயாணங்களை மேற்கொள்பவர்கள், வெளிநாட்டுக் குடியுரிமையுடையவர்கள், இரட்டைக்குடியுரிமை உடையவர்கள், வெளிநாடுகளில் வாழ்பவர்கள் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்கள், புலம்பெயர்ந்த உறவுகள் உங்கள் வீட்டிற்கு வருகைதர இருப்பின் அவர்களின் வருகையை பிற்போடச்செய்வது சிறந்த முடிவாகும்.

இல்லாவிடில் அவர்களின் வருகையை உங்கள் அருகில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு அல்லது யாராவது சுகாதார வைத்திய உத்தியோகத்தருக்கு அறிவிப்பதுடன் அவர்கள் வருகை தந்த நாளிலிருந்து அவர்களுடன் நீங்களும் 02 வாரங்கள் (14 நாட்கள்) சுயதனிமைப்படுத்தலில் இருத்தல் வேண்டும்.

மேற்கண்டவாறான சுய தனிமைப்படுத்தலுக்கு பொதுச்சுகாதார வைத்திய அதிகாரியின் உதவியை நாடவும்.

பொது ஒன்றுகூடல்கள்

அனைத்து வணக்கத்தலங்கள், கலாச்சார நிகழ்வுகள், மதம் சார்ந்த நிகழ்வு, விளையாட்டு ஒன்றுகூடல்கள் போன்றவற்றிற்கு செல்வதை தவிர்த்துக்கொள்ளுதல்

மறு அறிவித்தல்வரை பூங்காக்கள், உணவகங்கள், மற்றும் சினிமாக்களுக்கு செல்வதை தவிர்த்தல்

பிள்ளைகளை தனியார் கல்வி நிறுவனங்கள், குழு வகுப்புக்கள், தனியார் கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தனியார் பயிற்சிப் பட்டறைகள், முன்பள்ளிகள் போன்றவற்றிற்கு அனுப்புவதைத் தவிர்த்தல்

. உங்களுக்கு கொரோனா (ஊழுஏஐனு -19) நோய்கான அறிகுறிகள் இருப்பதாக நீங்கள் சந்தேகப்பட்டால் சிகிச்சைக்காக உங்களுக்கு அருகில் உள்ள அரசாங்க வைத்தியசாலையை நாடவும்.
. அவசியமற்ற பயணங்களை தவிருங்கள். பொதுப் போக்குவரத்து சேவைகளை பாவிப்பதை இயன்றளவு தவிர்க்கவும்.
. அத்தியாவசிய பொருட்கள் கொள்வனவு செய்வதற்காக ஆரோக்கியமான ஒருவர் மட்டும் வெளியில் சென்றுவருதல் நன்று.
. வெளியில் சென்று திரும்புபவர்கள் வீட்டிற்குள் உட்புகமுன் சவர்க்காரமிட்டு கைகள் கழுவுவதற்குரிய ஒழுங்கினை செய்தல்.
வைத்தியசாலையில் உள்ள உங்கள் உறவுகளைப் பார்வையிடச் செல்வதை இயன்றளவு தவிர்க்கவும். உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்கு ஒருவர் மட்டும் வைத்தியசாலைக்கு சென்று விரைவாக திரும்புதல் மிகவும் நன்று.
அரசாங்க திணைக்களங்கள் மற்றும் வங்கிகளுக்கு மிகவும் அத்தியவசியமான தேவைகள் அன்றி செல்வதை தவிரத்தல்

மக்கள்  ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட ஒத்துழைப்பு இக்கொரோனா வைரஸ் தொற்றுநோயை கட்டுப்படுத்துவதற்கு அவசியமாகும்.என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் குறித்த கூட்டத்திற்கு மேலதிக அரசாங்க அதிபர், முப்படை பிரதிநிதிகள், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் , பிரதேச செயலர்கள்கள், வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் ,கல்வித் துறை சார் அதிகாரிகள் மற்றும் சுகாதார சேவைகள் திணைக்களத்தின் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர் .   #அரசஅதிபர்   #சுயபாதுகாப்பு  #கொரோனா

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More