165
நாட்டில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ் நிலை காரணமாக ஜனாதிபதியினால் அண்மையில்; அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றுக்கான விலைகள் குறைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் மன்னார் மாவட்டத்தில் சில வர்த்தகர்கள் விலை குறைப்பு நடவடிக்கைகளை கருத்தில் கொள்ளாமல் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் அதே நேரத்தில் பொருட்களின் விலையை விட அதிகமாக விற்பனை செய்வதாகவும் மன்னார் மாவட்ட செயலகத்திற்கு கீழ் இயங்கி வரும் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையிடம் பாதீக்கப்பட்ட மக்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
நுகர்வோரின் முறைப்பாட்டின் அடிப்படையில் இன்றைய தினம் வியாழக்கிழமை (19) மன்னார் மாவட்ட செயலகத்திற்கு கீழ் இயங்கி வரும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை அதிகாரிகள் பொது மக்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
குறிப்பாக பொருட்களை பதுக்கி வைத்தல் , விற்க மறுத்தல் , கட்டுப்பாட்டு விலைக்கு மேலாக விற்றல் உற்பட பொருட்களின் விலையை விட அதிகமாக விற்பனை செய்தல் போன்ற சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடு படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் , அதே நேரத்தில் இவ்வாறான சம்பவங்களால் மக்கள் பாதிக்கப்படும் பட்சத்தில் மன்னார் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்கு 023-2251977 என்ற தொலைபேரி இலக்கத்திற்கு அழைத்து தெரியப்படுத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. #கொரோனா #அத்தியாவசிய #பதுக்கி
Spread the love