170
நாகர் கோவில் பகுதியில் கடற்தொழில் செய்யும் தொழிலாளி ஒருவருடைய படகின் வெளியிணைப்பு இயந்திரம் களவாடப்பட்டுள்ளதாக பருத்தித்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அது தொடர்பில் முறைப்பாட்டாளர் தெரிவிக்கையில் ,
கடற்தொழிலுக்கு செல்வதற்காக இன்று வியாழக்கிழமை காலை கடற்கரைக்கு சென்ற போது எனது படகில் பொருத்தப்பட்டிருந்த வெளியிணைப்பு இயந்திரம் கலவாடப்பட்டதனை அறிந்து கொண்டேன்.
பொருளாதார வசதிகளின்றி கஷ்டத்திற்கு மத்தியில் வாழும் நான் . வெளியிணைப்பு இயந்திரத்தினை தெரிந்தவர் ஒருவரிடமிருந்து பெற்றே தொழில் செய்து வந்தேன். அந்த இயந்திரமே களவாடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இதேவேளை கடந்த ஜனவரி மாதம் வீதி ரோந்தில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் மீது தாக்குதல் மேற்கொண்டார் எனும் சந்தேகத்தில் தேடப்பட்டு வரும் பிரதான சந்தேக நபரான ஐங்கரன் என்பவர் நேற்றைய தினம் புதன்கிழமை நாகர் கோவில் கடற்கரை பகுதியில் நடமாடுவதாக இராணுவத்தினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், இராணுவத்தினர் அவ்விடத்திற்கு வந்திருந்தனர்.
இராணுவத்தினரை கண்டதும் சந்தேக நபர் கடலில் குதித்து நீந்தி தப்பி சென்றுள்ளார். இதனால் ஆத்திரமுற்ற இராணுவத்தினர் அப்பகுதியில் நின்ற கடற்தொழிலாளர்கள் மற்றும் மக்கள் மீது தாக்குதல் நடாத்தியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இராணுவத்தினரின் தாக்குதல் காரணமாக கடற்கரையில் நின்ற மக்கள் அங்கிருந்து தப்பியோடியதால் , நேற்றைய தினம் இரவு அவ்விடத்தில் மக்கள் நடமாட்டம் காணப்படவில்லை.
இந்நிலையில் குறித்த கடற்தொழிலாளியின் படகின் வெளியிணைப்பு இயந்திரம் களவாடப்பட்டுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது #கடற்தொழிலாளி #இயந்திரத்தை #காணவில்லை #நாகர்கோவில் #தாக்குதல்
Spread the love