இன்றிரவு முதல் அனைத்து புகையிரத சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. நாடளாவிய ரீதியில் இன்று மாலை 6 மணியிலிருந்து எதிர்வரும் திங்கட்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவதால், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும் இன்று காலை கொழும்பு வந்தவர்கள் தமது ஊர்களுக்கு திரும்புவதற்காக சில புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் புகையிரத திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் இன்று மாலை 6 மணி முதல்; அதிவேக வீதியில் பயணிக்க அனுமதி வழங்கப்படும் எனவும் மாலை 4 மணிக்கு பின்னர் அதிவேக வீதியில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதெனவும் அதிவேக வீதி பராமரிப்பு மற்றும் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் எஸ்.ஓபநாயக்க தெரிவித்துள்ளார். #இன்றிரவு #புகையிரதசேவை #ரத்து #ஊரடங்கு