கொரோனா வைரஸ் இளைஞர்களையும் தாக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த வைரஸ் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளையும், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களையும் அதிக அளவில் தாக்கி உயிரிழப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வைரஸ் இளம் வயதினரை எளிதில் தாக்காது என்று கருதப்பட்ட நிலையில், தற்போது இளைஞர்களையும் கொரோனா தாக்க தொடங்கி உள்ள நிலையில் இதுபற்றி உலக சுகாதார அமைப்பு புதிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
இன்று இளைஞர்களுக்காக ஒரு தகவலை கூறுகிறேன். கொரோனாவில் இருந்து நீங்களும் தப்பிக்க முடியாது. கொரோனா வைரசானது உங்களை வாரக்கணக்கில் மருத்துவமனையில் முடக்கி விடலாம். உயிரிழப்பைக்கூட ஏற்படுத்தலாம். நீங்கள் நோய்வாய்ப்படாவிட்டாலும், நீங்கள் எங்கு செல்கிறீர்கள் என்பதைப் பொறுத்து நோய்த்தாக்கம் இருக்கும் என உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குனர் டெட்ராஸ் அதானம் கேபிரியசஸ் தெரிவித்துள்ளார். #கொரோனா #இளைஞர்களை #உலகசுகாதாரஅமைப்பு