கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு தொடர்ந்து இரு வார காலங்களுக்கு ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவது ஏற்புடையது என பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். பொறுப்பற்ற முறையில் செயற்படும் மக்களை கருத்தில் கொண்டு இவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது நாடு அதிகளவான கொரோனா தொற்றுக்குள்ளானவர்களை அடையாளம் காண்பதற்கு முன்னரான சூழலில் பயணிப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ள அவர் இதன் அதன் காரணமாக எதிர்வரும் வாரங்கள் மிகுந்த சவாலுக்குரியவை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசாங்கம் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்த எடுத்துள்ள தீர்மானம் வரவேற்கதக்கது எனத் தெரிவித்த பேராசிரியர் சன்ன ஜயசுமன இரண்டு நாட்களுக்கு மாத்திரம் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தினால் போதாது எனவும் மாறாக இரண்டு வார காலங்களுக்கு அதனை அமுல்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார் #ஊரடங்கு #கொரோனா #பேராசிரியர் #சன்னஜயசுமன