கொரோனா வைரஸ் இந்தியாவில் இதுவரை 341 பேருக்கு பரவியுள்ளதுடன்; மேலும் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்வடைந்துள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் எதிர்வரும்வரும் 31-ம் திகதி வரை பயணிகள் புகையிரத சேவை ரத்து செய்யப்படுவதாக இந்திய புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
இன்று நாடு முழுவதும் இன்று சுய ஊரடங்கு உத்தரவு பின்பற்றப்பட்டு வருகின்ற நிலையில் நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான இந்தியாவில் இதுவரை 341 பேருக்கு கொரோனா பரவியுள்ளது சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தன.
ஆனால், கடந்த சில நாட்களாக கொரோனா அறிகுறியுடன் புகையிரதத்தில் பயணம் செய்பவர்களின் தொடர்ந்து எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் காணப்பட்டதனால் வைரஸ் வேகமாக பரவும் அச்சம் நிலவி வந்தது.
இதனையடுத்து நாடு முழுவதும் இன்று முதல் மார்ச் 31-ம் திகதிவரை பயணிகள் புகையிரத சேவை அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக இந்திய புகையிரத அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதேவேளை தமிழகத்தில் இன்று கடைபிடிக்கப்பட்டு வரும் சுய ஊரடங்கு நாளை காலை 5 மணி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய சுய ஊரடங்கு இரவு 9 மணிக்கு முடிவடையவிருந்த நிலையில் நாளை காலை 5 மணி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் டெல்லியில் மார்ச் 31ம் திகதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது #கொரோனா #இந்தியா #புகையிரதசேவை #ரத்து #ஊரடங்கு #டெல்லி