கொழும்பு, கம்பஹா, புத்தளம் மற்றும் வட மாகாணத்தின் 05 மாவட்டங்களிலும் தளர்த்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் இன்று(24) பிற்பகல் 02 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது. இந்த பகுதிகளில் இன்று காலை ஆறு மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டது.
ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ளவர்கள் சுகாதார துறையினரின் அறிவுறுத்தலுக்கு அமைய செயற்படுமாறு ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.
வீட்டிலிருந்து வெளியில் செல்லும் போதும், சிறப்பு அங்காடிகள், வர்த்தக நிலையங்களுக்கு செல்லும் போதும் முககவசங்களை அணிய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது
இதேவேளை, கொழும்பு,கம்பஹா,புத்தளம் மற்றும் வட மாகாணத்தின் 05 மாவட்டங்களிலும் இறுதி வாடிக்கையாளர் பொருள் கொள்வனவில் ஈடுபடும் வரை வர்த்தக நிலையங்களை திறந்து வைக்குமாறு காவற்துறை ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார். இதன் காரணமாக எவ்வித பதற்றமும் இன்று பொருள் கொள்வனவில் ஈடுபடுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்