Home இலங்கை தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்க வைக்கப்பட்டிருந்த 311 பேர் வெளியேற்றம்

தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்க வைக்கப்பட்டிருந்த 311 பேர் வெளியேற்றம்

by admin


வெளிநாடுகளில் இருந்து இலங்கை சென்று கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் என தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த முதலாவது குழு அந்த நிலையங்களிலிருந்து வெளியேறியுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து சென்ற 311 பேர் அடங்கிய குழுவொன்றே இவ்வாறு தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து வெளியேறியதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இத்தாலி, ஈரான் மற்றும் தென்கொரியாவில் இருந்து சென்றவர்களே இவ்வாறு சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளனர். கந்தகாடு தடுப்பு முகாமிலிருந்து 108 பேரும், புனானை தடுப்பு முகாமில் இருந்து 203 பேரும் இவ்வாறு வெளியேறியுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இவர்கள் கண்டி, மாத்தறை மற்றும் காலி ஆகிய இடங்களுக்கு இராணுவத்தினரால் விசேட பேருந்துகளில் அழைத்துச் செல்லப்படவுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்களுக்கு தேவையான உணவு பொருட்களை பெற்றுக்கொடுக்க உள்ளதாகவும் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். #தனிமைப்படுத்தல்  #தங்க  #வெளியேற்றம் #கொரோனா

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More