கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 90 சதவீதமானோhர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளதாக சீன தேசிய சுகாதார ஆணையகம் தெரிவித்துள்ளது. சீனாவில், கொரோனா வைரசால் 81 ஆயிரத்து 93 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் அவர்களில் 90 சதவீதம்பேர் குணமடைந்து, மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியதாக அந்த ஆணையகம் தெரிவித்துள்ளது.
தற்போது, 5 ஆயிரத்து 120 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் இருந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 39 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 9 பேர் பலியாகி உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் கொரோனா முதலில் தோன்றிய {ஹபேய் மாகாணத்தில் புதிதாக யாருக்கும் பாதிப்பு இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது #சீனா #கொரோனா #குணமடைந்துள்ளனர் #தேசியசுகாதாரஆணையகம்