கொரோனா வைரஸ் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகள் ஓரு வருடம் பிற்போடப்பட்டுள்ளன என சர்வதேச ஒலிம்பிக் அமைப்பின் குழு உறுப்பினரான டிக் பௌண்ட் கூறியுள்ளார்.
பிரித்தானிய ஒலிம்பிக் அமைப்பின் தலைவர் டோக்கியோவுக்கு தங்கள் நாட்டு வீரர்களை அனுப்ப விரும்பவில்லை என தெரிவித்ததும் சர்வதேச ஒலிம்பிக் அமைப்பினர் இவ்வாறு அறிவித்துள்ளனர்.
ஏற்கனவே அவுஸ்திரேலியாவும் கனடாவும் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள முடியாது என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நான்கு வாரங்களுக்குள் ஒலிம்பிக் போட்டிகள் குறித்த அடுத்த முடிவு எடுக்க வேண்டும் என சர்வதேச ஒலிம்பிக் ஒருங்கிணைப்பாளர்கள் குழு நிர்ணயித்துள்ள போதும் விரைவிலேயே இது குறித்து அடுத்த அறிவிப்பு வெளிவரும் என டிக் பௌண்ட தெரிவித்துள்ளார். #ஒலிம்பிக் #பிற்போடப்பட்டுள்ளன #கொரோனா #டோக்கியோ