கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்தும் வகையில் இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் 21 நாட்கள் நாடு தழுவிய அளவில் ஊரடங்கு அமுல்ப்படுத்தப்படும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். ஏற்கனவே நேற்று திங்கட்கிழமை முதல் பூட்டுதல் நடவடிக்கைகள் ஏற்கனவே இருந்த நிலையில் இந்தப் ஊரடங்கு நடவடிக்கை இப்போது நாட்டின் ‘ஒவ்வொரு கிராமத்திற்கும், ஒவ்வொரு மாவட்டத்திற்கும்’ விரிவுபடுத்தப்படும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட தேசிய உரையில் உரையாற்றிய மோடி, ‘உங்கள் வீடுகளை விட்டு வெளியேற நினைப்பதை மறந்துவிடுங்கள்’ என இந்தியர்களிடம் தெரிவித்துள்ளார்
21 நாட்கள் இந்த சமூக விலகலை பின்பற்றுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்
- யாரும் வீட்டை விட்டு வெளியே வராதீர்கள்
- 21 நாட்களுக்கு ஊரடங்கு அமுலில் இருந்தாலும், அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கும்
- இந்த ஊரடங்கு காரணமாக பொருளாதாரம் பாதிக்கப்படும் என்பதை அறிந்துள்ளேன்
- பொருளாதாரம் பாதித்தாலும், நாட்டு மக்களின் உயிர்தான் எனக்கு முக்கியம்
- இந்த 21 நாட்கள் நாம் சுய ஒழுங்கைக் கடைபிடிக்காவிட்டால் 20 ஆண்டுகளுக்கு நாம் பின்னோக்கி சென்று விடுவோம்
- தனித்து இருப்பதை தவிர தப்பிப்பதற்கு வேறு வழி கிடையாது
- சீனா, அமெரிக்கா, ஈரான் போன்ற நாடுகள் சமூக விலகலை, சரிவர பின்பற்றாததால்தான் சிரமப்படுகின்றன. அந்த நாடுகளில் இருந்து பெற்ற படிப்பினை மூலம் நாம் கொரோனாவைத் தடுக்கலாம்
- கொரோனா பரவத் தொடங்கினால் அதை தடுத்து நிறுத்துவது மிகப்பெரிய சவால் ஆகிவிடும்
- நீங்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம், உங்கள் விருந்தினர் உள்ளிட்ட யாரையும் வீட்டுக்குள்ள அனுமதிக்கவும் வேண்டாம்
- இப்போது கடைபிடிக்கப்போகும் ஊரடங்கு என்பது, மக்கள் ஊரடங்கு (ஜனதா ஊரடங்கு) விடவும் கடுமையானதாக இருக்கும்.
- மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், கிராமங்கள் உள்ளிட்ட அனைத்தும் லாக்டவுன் செய்யப்படும். இவ்வாறு, நரேந்திர மோடி தெரிவித்தார். #இந்தியா #நாடுதழுவிய #பூட்டு #நரேந்திரமோடி