169
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை 422 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். நேற்றய புள்ளிவிவரங்களின்படி பிரித்தானியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் என 6,650 பேர் உறுதிப்படுத்தப்பட்டிருந்தனர்.
இந்தநிலையில் இன்று பிற்பகல் 1 மணி நிலவரப்படி இந்த எண்ணிக்கை 8,077 ஆக உயர்ந்துள்ளது என NHS அறிவித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி இறப்பு எண்ணிக்கை 335 பேராக உறுதிப்படுத்தப்பட்டது. எனினும் கடந்த 24 மணி நேரத்தில் பிரித்தானியாவில் 87 பேர் பலியாகி இறப்பு எண்ணிக்கை 422 ஆக உயர்ந்துள்ளது. #பிரித்தானியா #முடக்கப்பட்ட #இறப்பு #கொரோனா
Spread the love