உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் ரஸ்யாவில் மட்டும் கட்டுக்குள் வந்தது எப்படி என்பது பலரதும் கவனத்தினை ஈடுந்துள்ளது
உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களை மிக குறைவாக கொண்ட நாடு என முதலாவது இடத்தில் ஐக்கிய அரபு அமீரகம் காணப்படும் நிலையில் ரஸ்யா இரண்டாவது இடத்தில் உள்ளது.
ரஸ்யா இவ்வாறு இரண்டாவது இடத்தில் இருப்பது தொடர்பில் ஆச்சரியப்பட வைப்பதற்கான காரணங்கள் :
1. ரஸ்யாவின் மக்கள் தொகை 14 கோடியே 67 லட்சம்.
2. ரஸ்யா முதலில் கொரோனா வைரஸ் தோன்றிய சீனாவுடன் 4,209.3 கி.மீ. பரப்பிலான நீண்ட எல்லையை கொண்டுள்ளது.
3. கொரோனா ஆதிக்கம் செலுத்தி வந்த சீனா, நோர்வே உள்ளிட்ட 14 நாடுகளுடன் ரஸ்யாவின் எல்லை பரந்து விரிந்திருக்கிறது.
4. ரஸ்யா வில் 9 நேர மண்டலங்கள் வௌ;வேறு நேரம் காட்டும்.
இவ்வாறு காணப்பட்ட போதிலுத் ரஸ்யாவில்; கொரோனாவின் ஆதிக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கடைசியாக கிடைத்த தகவல்களின் படி ரஸ்யாவில் 1.5 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றிருப்பதாகவும் அதில் 253 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 லட்சத்து 28 ஆயிரம் பேரை மக்கள் தொகையாகக் கொண்ட லக்சம்பெர்க் நாட்டில் கூட சனிக்கிழமை வரை 670 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது
தினந்தோறும் நூற்றுக்கணக்கானோரை பலிகொள்ளும் இத்தாலி, பிரான்ஸ் நாடுகளுடன் ஒப்பிடுகையில் சுமார் 15 கோடியை நெருங்கிக்கொண்டிருக்கிற மக்கள் தொகையை கொண்டுள்ள ரஸ்யாவில் கொரோனாவின் தாக்கம் குறைவாக இருக்கின்றது.
இதற்கான காரணங்களாக பின்வருவன கூறப்படுகின்றன :
* சீனாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய 15 நாட்களுக்குள்ளேயே ரஸ்ய பிரதமர் மிக்கேல் மிசுஸ்டின், சீனாவுடனான தனது எல்லையை மூட உத்தரவிட்டார். இது மிக முக்கிய காரணம்.
* ரஸ்யா அப்போதே தனிமைப்படுத்தப்பட்ட மண்டலங்களை உருவாக்கியது.
* ரஸ்ய மக்கள் எத்தனையோ தலைமுறை பழமையானவர்கள். போர்கள், பஞ்சங்கள், அரசியல் நிலைத்தன்மை இல்லாமை உள்ளிட்ட பல காரணங்களால் அவர்கள் மரபணுக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக கொண்டிருக்கின்றனர்
* ரஸ்யா வில் எல்லாவிதமான வெளிநிகழ்ச்சிகளுக்கும் ஆரம்பத்திலேயே தடை விதிக்கப்பட்டு விட்டதுடன் பொதுமக்கள் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டது. பாடசாலைகள் பள்ளிகள், உடற்பயிற்சி கூடங்கள் அனைத்தும் உடனும் மூடப்பட்டன.
* அந்நாட்டிலேயே சுற்றுலாப்பயணிகள் பெருவாரியாக செல்லும் இடமான சோவியத் ரஸ்யாவை உருவாக்கிய விளாடிமிர் லெனின் நினைவிடம் அமைந்துள்ள மொஸ்கோ செஞ்சதுக்கத்துக்கு மக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.
* ரஸ்யாவில் கொரோனா வைரஸ் பரிசோதனைக்கென்று ஒரே ஒரு ஆய்வுக்கூடம் தான் இருக்கிறதாம்.
* ரஸ்யாவில் அரசியலமைப்பு சாசனம் திருத்தங்கள் தொடர்பாக ஏப்ரல் 22ம் திகதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த பொது வாக்கெடுப்பு தள்ளிப்போடப்பட்டுள்ளது.
* ரஸ்யாவில் முதன்முதலாக கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி மீண்டு வந்துள்ள டேவிட் பெரோவ், ‘எனக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருப்பதை உறுதி செய்ய 3 முறை பரிசோதனை நடத்தினார்கள். எனது 3-வது பரிசோதனையில்தான் இது உறுதி செய்யப்பட்டது. அதுவும் என் ரத்தத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் இல்லை. உமிழ்நீரில்தான் இருந்தது’ என்று இன்ஸ்டாகிராமில் மார்ச் 5-ல் பதிவிட்டிருக்கிறார்.
* ரஸ்யாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் ரஸ்ய பிரதிநிதி டொக்டர் மெலிடா உஜ்னோவிக் கூறுகையில், ‘கொரோனா வைரசுக்கு எதிரான கட்டுப்பாடுகள் ஜனவரி மாதமே ரஸ்யாவில் தொடங்கி விட்டன. சோதனைகளை தாண்டி பரந்த அளவில் பலவிதமான நடவடிக்கைகளையும் ரஸ்யா மேற்கொண்டது. உலக சுகாதார நிறுவனத்தின் நெறிமுறைகள்படி இந்த நடவடிக்கைகள் எல்லாம் முன்கூட்டியே எடுக்கப்பட்டு விட்டன’ எனத் தெரிவித்துள்ளார்.
* ரஸ்யாவில் மே 1ம் திகதி வரை அனைத்து வெளிநாட்டினருக்கும் தடை நீடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது; #ரஸ்யா #கொரோனா #கட்டுக்குள்