வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் நலனுக்காக வெளியுறவு அமைச்சு மற்றும் இலங்கையின் தகவல் மற்றும் தொலைத் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றால் ´இலங்கையை அழையுங்கள்´ என்ற வழிமுறையை நேற்று (26) முதல் வெளிவிவகார அமைச்சு ஆரம்பித்துள்ளது.
இந்த வலை இணைப்பு அமைச்சின் இணைய தளமான www.mfa.gov.lk இல் வழங்கப்பட்டுள்ளதுடன் இதற்குள் www.contactsrilanka.mfa.gov.lk என்ற இணைய முகவரியை பயன்படுத்தி அணுகலாம்.
COVID – 19 பரவலை எதிர்த்து அரசாங்கத்தின் அனைத்து பங்குதாரர்களின் முயற்சிகளையும் ஒருங்கிணைப்பதற்கும், விரைவான, வேகமான மற்றும் திறமையான சேவை வழங்கலுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கும் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் வேண்டுகோளின் பேரில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
COVID -19 பரவல் போன்ற அவசர நிலைமைகளின் போது வெளிநாடுகளில் வசிக்கும் அனைத்து இலங்கையர்களும் இந்த தளத்தில் தம்மை பதிவுச்செய்து தமது உதவிகளை வழங்க முடியும்.
இந்த தளம் விரைவான நடவடிக்கைக்கு நிகழ்நேர தரவைப் பெற அமைச்சகத்தை அனுமதிக்கிறது.
இந்த திறந்த அணுகல் தளம் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு அரசாங்க பங்காளிகளுடன் தொடர்புகொள்வதற்கும், வெளிநாட்டு உறவுகள் அமைச்சின் மைய புள்ளிகளில் ஒன்றின் மூலம் அரசு சேவைகளுக்கு அதிக அணுகலை வழங்குவதற்கும் உதவும்.
இந்த இணைய முகவரி வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை இணைய வலைபின்னலுடன் இணைக்கும்.
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு அதிகாரப்பூர்வ தகவல் ஆதாரமாகவும், அரசாங்க அளவிலான டிஜிட்டல் சேவைகளுக்கான அணுகலுக்காகவும் இந்த தளம் செயற்படும்.
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் சந்தேகங்களுக்கு பதிலளிப்பதற்கும், அவசர காலங்களில் சம்பந்தப்பட்ட பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்து ஆன்லைன் உதவி மையமாக செயல்படுவதற்கும் இது உதவும் இதற்கான அதிகாரிகள் குழுவை வெளியுறவு அமைச்சகம் ஏற்கனவே நியமித்துள்ளது.
அவசர உதவி கோரிக்கைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் உறுதியான கொள்கை முடிவுகளை எடுக்க இது உதியாக அமையும்.
பொதுவான கேள்விகளுக்கு வழிகாட்டியாகவும் இது செயற்படுவதோடு இந்த இணைய தளத்திற்குள் மிகவும் எளிதாக பிரவேசிக்க முடியும் என்பதோடு பதிவுசெய்யப்பட்ட அனைத்து பயனர்களும் மொபைல் போன் வழியாக அதை அணுகலாம் அல்லது விசாரணைகளை மேற்கொள்ள முடியும்.
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் அடையாளத்தை முழுமையாக பாதுகாத்து உறுதிப்படுத்தும் இணையமாக இது அமைந்துள்ளது.
மொபைல் போர்ட்டல் மூலம் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கான விரிவான ஒன்லைன் சேவை தளமாக போர்ட்டலின் அம்சங்களை விரிவாக்க ஐ.சி.டி வெளி உறவுகள் அமைச்சகத்துடன் இணைந்து செயல்படும்.
இந்த கூட்டு தளம் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு தற்போதுள்ள சேவைகளை மேம்படுத்தும் என்று வெளியுறவு அமைச்சு நம்பிக்கை கொண்டுள்ளதுடன், இதனை பயன்படுத்தி பயன்பெறுமாறு வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களை அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.