பிரிட்டனில் கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வருவதற்கான அறிகுறிகளின் தொடக்கம் தென்படுவதாக அரசாங்கத்தின் பிரதான ஆலோசகரும் முக்கிய தொற்றுநோயியல் நிபுணருமான Prof Neil Ferguson தெரிவித்துள்ளார்.
பிரிட்டனை முடக்கத்திற்கான அரசாங்கத்தின் அறிவிப்பின் காரணமாக சமூகரீதியான தொலைதூர செயற்பாடுகள் செயல்படத் தொடங்கியுள்ளதாகவும், அதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் Prof Neil Ferguson குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் இது நாளாந்தம் அறிக்கையிடப்பட்ட இறப்புகளின் எண்ணிக்கையில் இன்னும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிபிசி 4 வானொலியின் இன்றைய நிகழ்ச்சியில் செவ்வி அளித்த அவர், பிரிட்டனின் சில குறிகாட்டிகளில், தொற்று மெதுவாக வருவதற்கான சில ஆரம்ப அறிகுறிகளைக் காணமுடிகிறது. இறப்புகள் குறைந்து வருகின்றன. கடுமையான நடவடிக்கைகள் நடைமுறைக்கு வரும்போது இறப்புகள் நீண்ட கால நோக்கில் குறைந்து செல்வதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
“எனினும் மருத்துவமனையில் இன்று புதிதாக அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைப் பார்க்கும் போது, உதாரணமாக, அது இப்போது கொஞ்சம் குறைந்து வருவதனைக் காண முடிகிறது. ஒவ்வொரு நாளும் எண்கள் அதிகரித்து வருவதால் இது இன்னும் மயான பூமியாக மாறவில்லை, பதிலாக அந்த அதிகரிப்பு விகிதம் குறைந்துவருகிறது. பல ஐரோப்பிய நாடுகளில் இதேபோன்ற வடிவங்களை நாங்கள் காண்கிறோம்.”
“இங்கு மூன்றில் ஒரு பங்கினர், 40% பேர்” எந்த அறிகுறிகளையும் பெறவில்லை, எனினும் பெரும்பான்மையான மக்கள் அறிகுறியற்றவர்கள் என்ற கூற்றுக்களை ஆதரிக்க எம்மிடம் எந்த ஆதாரமும் இல்லை” என்றும் பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய லண்டனில் 3-5% மக்களுக்கு தொற்றுநோய் இருந்திருக்கலாம் எனத் தோன்றியது, ஆனால் இந்த எண்ணிக்கை higher in hotspots பகுதிகளில் அதிகமாக இருக்கலாம், அதே நேரத்தில் நாட்டின் எண்ணிக்கை 2-3% ஆக இருக்கும் எனத் தெரிவித்த பேராசிரியர் நீல் பெர்குஸன், அடுத்த முக்கியமான கட்டம் நோய் எதிர்ப்பு (antibody tes) சோதனையாகும், இது மக்களுக்கு ஏற்கனவே வைரஸ் இருந்ததா “சோதனையின் இறுதி கட்டங்களில்” உள்ளதா என்பதைக் கூற முடியும், இதுவும் சில நாட்களுக்குள் செயல்படக்கூடும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் கூறினார்.
அத்துடன் பிரிட்டனின் முடக்கம் குறித்த மதிப்பீடுகள் பயனளிக்கக் கூடும் என Prof Neil Ferguson நம்பிக்கையை வெளியிட்டாலும், கொரோனா தொற்றுக் குறித்த சோதனைகளை அதிகரிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி உள்ளார்.
இதேவேளை சுகாதார அமைச்சர் Helen Whately NHS ஊழியர்கள் உட்பட அரசாங்கம் சோதனைகளை பெருமளவில் அதிகரித்து வருவதனை கோடிட்டக் காட்டியுள்ளார். இருந்த போதும் ஞாயிற்றுக்கிழமை (30.03.20) 7,000 பேர் மட்டுமே பரிசோதிக்கப்பட்டனர் என Cabinet Office minister, Michael Gov மற்றும் சுகாதார health secretary, Matt Hancock ஆகியோர் ஏற்றுள்ளனர்.
இந்த நிலையில் கொரோனோவை கட்டுக்குள் கொண்டு வந்து சுமூக நிலையை ஏற்படுத்த மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை கட்டுப்பாடுகள் நீடிக்கும் என துணை தலைமை மருத்துவ அதிகாரி Jenny Harries, கூறியதையதனை தொடர்ந்து, பிரிட்டனின் முடக்கம் எப்போது முடிவடையும் என்பதனை தெரிவிக்க சுகாதார அமைச்சர் Helen Whately பின்வாங்கியுள்ளார்.