கொரோனா வைரஸ் பேரவலைத்தை தொடர்ந்து இணைய பாவனை கொள்ளவு – தரவு இறக்கம் – தரவேற்றம் – பயன்பாட்டு அளவு கட்டுப்பாடுகளை அகற்ற பிரித்தானியாவின் முக்கிய இணைய வழங்குநர்கள் இணங்கியுள்ளனர்.
இந்த இணக்கப்பாடானது தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் உடன்பட்ட புதிய நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும்.
ஏனைய தேவைகளுக்கான தங்கள் கட்டணங்களை செலுத்துவதில் சிக்கல் உள்ள வாடிக்கையாளர்களை ஆதரிக்கும் “நியாயமான மற்றும் சரியான” நடவடிக்கையாக இது அமையும் என தெரிவிக்கப்பட்டள்ளது.
இதன் அடிப்படையில் “தாராளமான” புதிய மொபைல் மற்றும் லாண்ட்லைன் இணைப்பு வசதிகளை வழங்கவும் வழங்குநர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த இணக்கப்பட்டுக்கு பின்வரும் நிறுவனங்கள் இணங்கிக்கொண்டுள்ள.
- BT, including its Openreach and EE divisions
- Virgin Media
- Sky
- TalkTalk
- O2
- Vodafone
- Three
- Hyperoptic
- Gigaclear
- Kcom